நான் இங்கே பதிவிடும் பதிவுகளில் , எனது சொந்த ஆக்கம், மற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆக்கம் , ரசித்தவை , அனுபவித்தவை, படித்தவை, மற்றும் எனக்கு எதாவது ஒரு தருணத்தில் உபயோகப்படும் என நான் நினைக்கும் விடயங்கள் (மற்றவரின் ஆக்கங்கள்) போன்ற அனைத்தும் அடங்கும்.



தூற்றுபவர் தூற்றட்டும் போற்றுபவர் போற்றட்டும், நான் எனது வழியில் முன்னேறி செல்வேன்.

Monday, October 3, 2011

உக்ரைன் பயணம் பார்ட் 2


நான் கிளம்ப வேண்டிய நாளும் வந்துது. அதுவர பாத்து பாத்து வாங்கின சாமான் சட்டி எல்லாத்தையும் எடுத்துகிட்டு ஒரு வான் ல, மொத்த குடும்பமும் விமான நிலையம் போனம்....


அங்க சன நெருக்கடி அதிகமா இல்ல, நான் வாரதாலையோ என்னமோ செக்கிங் கூட  அவ்வளவா இல்ல.....

எல்லாரும் டிக்கெட் வாங்கிகிட்டு உள்ள போனம்  தலைக்கு 200 ரூவா  டிக்கெட் காசு எண்டு புடுங்கிகிட்டாங்க ,

உள்ள போனா அங்க என்கூட  பறக்குரதுக்கு ரெடியா கிஷான் அண்ட் தினேஷ் வந்திருந்தாங்க, அவங்க ரெண்டு பெரும் சேர்ட் உள்ளவிட்டு , டை கட்டி பக்கா ஜென்டில்மேன் போல இருந்தாங்க, நான் தான் தெரியுமே வழக்கம் போல அதே டெனிம் ட்ரவுசர் , நீல கலரு புல் கை சேர்ட் (அத முழங்கை வர மடிக்குறது தான்  எனக்கு பிடிக்கும்), பிரவுன்கருப்பும் செவப்பும் கலந்த ஒரு சப்பாத்து போட்டுட்டு ஒரு கூலிங் கிளாஸ் வச்சிகிட்டு பந்தா பணினேன்,


எங்கள  கூட்டிட்டு போற பீட்டர் அன்ன வந்தாரு, எல்லா டோகுமேண்டும் சரியா இருக்கா  எண்டு பாத்துட்டு, பாஸ்போர்ட் வாங்கிக்கொண்டு எங்கயோ போய்ட்டாரு


அந்த கேப் ல நாங்க வீட்டு ஆக்களுக்கு டாட்டா காட்டிட்டு, அவங்க கண்ணீர் மல்க, ( நாங்க சிரிப்பு பொங்க ) போர்டிங் பாஸ் எடுக்க கேளம்பினோம், பீட்டரும்  வந்து சேந்துட்டாரு எங்ககூட.....

போர்டிங் பாஸ் வாங்கிகிட்டு ஏதோ ஒரு போம் நிரப்பனுமாமே  அதையும் நிரப்பிகிட்டு .........

50m தூரத்துல நின்னு வீட்டு ஆக்கள் பக்கம் திரும்பி மறுபடி டாட்டா காட்டினேன். அப்போ அம்மா அழுதத கண்டு எனக்கும் லைட் ஆ மனசு கனத்துது,........ அத வெளிய காட்டிக்கொள்ளாம  ஸ்டைல் ஆ என்னட நீல கலரு ஹெட் பேக் எ தூக்கிட்டு  நடந்தேன் .....


எங்க மூணு பேருக்கும் இதுதான் முதல் விமான பயணம் , ஆனா என்ன எனக்கு கொஞ்சம் குட பயம் இல்ல, அந்த ரெண்டு பேரும் பயத்துலையே ஒன்னுக்கு போற லெவல் ல இருந்தாங்க ......


அப்படியே போய் மிச்சம் மீதி இருக்க செக்கிங் எல்லாம் முடிச்சிட்டு
(சப்பாத்து கலட்ட சொன்ன இடத்துல தான் கோவம் வந்துது)

நான்  போர்டிங் பாஸ் தரும்போது அந்த பிகருகிட்ட நடைபாதைக்கு கிட்ட இருக்க சீட் கேட்டு வாங்கினேன், ( விண்டோ சீட் ல இருந்தாவிமானமுள்ள நடக்குறத கவனிக்க முடியாது ) அவனுங்க ரெண்டு பேரும் விண்டோ சீட் கேட்டு கிடச்ச ஒரு சீட் ல மாறி மாறி உக்கருவம் எண்டு பிளான் பண்ணிகிடாங்க

ஒருமாதிரி கிளம்புற நேரம் வரவும் விமானத்துல ஏறினோம்.....

நான் விருப்பப்பட்ட சீட் ல இருக்காம  விண்டோ சீட் ல போய் இருந்தேன், அவனுங்க வந்து கடுப்பகிட்டங்க, அப்போ நன் சொனேன் பறக்கும்பொது நான்  எதுவும் பாக்க முடியாது தானே சோ இப்போ இங்க இருக்கேன் பறந்ததும் அங்க போறேன் எண்டு சொனேன்
(ஒரே கல்லுல ரெண்டு மாங்கா  விண்டோ ல இருந்து விமானம் கிளம்புறத ரசிச்ச மாத்திரம் போச்சு, அப்புறம் விமானம் உள்ள இருக்க பிகருங்கள ரசிச்ச மாதிரியும் போச்சு)
அவனுங்களும் தலைய ஆட்டினாங்க  நம்ம ப்ளானிங் தெரிஞ்ச கொன்னு இருப்பாங்....

 அந்த விமானத்துல கூட்ட்டமே இல்ல, பாதிக்கு மேல சீட் எல்லாமே காலியா இருந்துது,,,,,,

விமானத்துல ஏறின அடுத்த நிமிசமே அந்த ரெண்டு ஜீவன்களும் செம தூக்கம், ( பணிப்பெண் அறிவுத்தல் குடுத்ததுக்கு கூட எழும்பல, செப்டி அட்வைஸ் எதுவும் கேக்கல )

நான் தான் பப்பரப்பா எண்டு அங்கயும் இங்கயும் பாது  டிவி ல போன வழிகாட்டல் அறிவுறுத்தல் எல்லாத்தையும் கவனமா ரசிச்சுகொண்டேன்.....

எனக்கு மறுபக்கம் மூண்டு பேர் இருக்க சீட் ல பீட்டர் மட்டும் தனியா இருந்தாரு,

 அவரு, ஆரம்பத்துலையே ரெண்டு பேக் சரக்கு அடிச்சிட்டு மட்டயாகிட்டறு,   ஆகா மொத்தம் அந்த மூண்டு துங்கு மூஞ்சிக்கு நடுவுல நான் மட்டும் விமானத்த அனுபவிக்க ஆரம்பிச்சேன் .....



விமானம் கிளம்புறது கூட தெரியாம இருந்தானுங்க அந்த மூணு பேரும், எனக்கோ சந்தோசம் தாங்க முடியல, முதன்முதலா பறக்கபோரம்....
ஏ  ஏ ஏ ஏ ஏ  எண்டு மனசு துல்லிச்சு,



ஒரு மாதிரி விமானமும் பரந்துச்சா அடடா என்ன அழகு, ரன்வே ல ஓடும்போது ஒரு கிக் வருமே அது எனக்கு பிடிச்சு இருந்துது..... கண் இமைக்குரதுக்குள்ள ஜிவ் எண்டு வானத்த நோக்கி போயிட்டு


வழக்கமா கொழும்பு-புத்தளம் ரோடு ல போவும்போது பாத்த விமானம் இப்போ என்னையும் சுமந்துகொண்டு பறக்குது...

இவ்வளவு நேரம் போரம் போரம் எண்டு சொன்னனே எங்க எண்டு கேட்டிங்களா ? நான் இப்போ போறது டெல்லிக்கு , அங்க தான் உக்ரைன் எம்பசி இருக்கு அதான் உக்ரைன் விசா எடுக்குரதுக்காக டெல்லி போறேன்

ஆங் எங்க விமான பணிப்பெண் பத்தி சொல்லலயே.... 

அவா பேரு லக்மாளி சூப்பர் பிகரு, அதுவும் அதிகம் சனம் இல்லாததால அவாக்கு வேலை குறைவு, 
அதால டெல்லி போய் சேரும் வர அவகுட கடலை கச்சான் பக்கோடா எல்லாம் போட்டுட்டு இருந்தேன்,

( விமானம் கெளம்பி பத்து நிமிசத்துல நான் என்னட சீட் கு  வந்துட்டேன், இது தானே என்னட ப்ளானிங், பணிப்பெண் கூட பேசணும் எண்டு தானே நன் அந்த சீட் எடுத்தது )


அப்புறம் என்ன அவா குடுத்த சாப்பாட்டையும் நல்ல  வெட்டு வெட்டிட்டு..



ரெண்டு கேன் பெப்சியையும் உள்ள தள்ளிட்டு டிவி ல போன படத்த பாத்துகிட்டே என்னட பிகர் கூட ( அதான் அந்த பணிப்பெண் ) குலவலாவா ஆரம்பிச்சேன், ( அவா இன்னும் என்னட முகபுத்தகத்துல நண்பியா இருக்கா )

இது முதல் பயணம் எண்டு சொன்னேன், அவா என்ன கூடிட்டுபோய் விமானத்த சுத்தி காட்டினாங்க ,,,,, இது எதுவுமே அந்த மூணு ஜீவனுக்கும் தெரியாது,

அப்புறம் விமானம் டெல்லி ல இறங்கும்போது இரவு பன்னிரண்டு மணி  ஏழு மணிநேர பயணம் எண்டதால கொஞ்சம் அலுப்பு... ...


டெல்லி ல என்ன நடந்து எண்டு அடுத்த பதிவுல சொல்றேன்






4 comments:

  1. அடேங்கப்பா... நீங்க பெரிய ஆளுதான்ப்பா.....
    பதிவு நல்லா இருக்கு..
    உங்க வசன நடை ரசிக்கக் கூடியதாக இருக்கு... 2ம் பாகம் எழுதும் போது, முதல் பாகத்துக்கான லின்க் குடுக்க மாட்டீங்களா?? முதல் பாகம் படிக்காத நம்மளபோல ஆளுங்க படிக்கலாமுள்ள..

    ReplyDelete
  2. boss nalla paarunga, heading ku keela link kuduthutu than intha post typ panawe aarambicchen,.......... konjam kavanicchu parunga boss

    ReplyDelete

நல்லா தலையில உரைக்குற மாதிரி சொல்லுங்க