நான் இங்கே பதிவிடும் பதிவுகளில் , எனது சொந்த ஆக்கம், மற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆக்கம் , ரசித்தவை , அனுபவித்தவை, படித்தவை, மற்றும் எனக்கு எதாவது ஒரு தருணத்தில் உபயோகப்படும் என நான் நினைக்கும் விடயங்கள் (மற்றவரின் ஆக்கங்கள்) போன்ற அனைத்தும் அடங்கும்.



தூற்றுபவர் தூற்றட்டும் போற்றுபவர் போற்றட்டும், நான் எனது வழியில் முன்னேறி செல்வேன்.

Monday, October 3, 2011

யாருக்காக காத்திருக்கின்றாள் இவள் ?? ?? ?? ?? ?? ?? (சொந்த அனுபவம்)

நிஸ்கி 1-  குறிப்பிட்ட இடங்களில் நம்பர் போட்டு இருக்கேன், இந்த பதிவின் இறுதியில் அந்த நம்பர் கு உரிய படங்கள் போட்டு இருக்கேன்  மேட்ச் பண்ணி பாத்துக்கங்க
======================================================================

நான் வழக்கமாக செல்லும் பாதையில் ஒரு அதிசயம் அன்று நிகழ்ந்தது,

வழக்கத்துக்கு மாறாக யாரோ என்னை கண்காணிப்பது போல் ஒரு பீளிங்கு

(தேவையாடா உனக்கு ?)

நானும் கொஞ்சநேரம் நின்னு, திரும்பிபாத்தேன் ,அப்போது தான் அவளை எங்க ஏரியா பக்கம் முதன் முதலா காண்கின்றேன்,



அதே சிவத்த உடம்பு ரொம்ப குண்டும் இல்லாம ரொம்ப ஒல்லியும் இல்லாம செம சைஸ் உடம்பு,
(சுப்பர் பிகரு எண்டு சொல்வாங்களே அப்படி)

கருப்பு கலருல பூட்ஸ், கழுத்துல வெள்ளை கலருல ஒரு அழகான செயின்.....
இதுக்கு முதலும் அவளை வேற இடத்தில் எல்லாம் கண்டு இருக்கேன்

(நம்பர்  ஒன்)

ஆனாலும் எங்க வீட்டுக்கு கிட்டவே வந்துவிடுவாள் எண்டுகனவு கூட கானல,

என மனசுல ஒருவித தயக்கம் அவளுக்கு கிட்ட போய்  தொட்டு பாக்கலாமா எண்டு.....

இன்னைக்குவேண்டாமே  எண்டு மனசுல நினச்சிட்டு  என் வழியில் போயிட்டேன்,

அடுத்த  நாள் வழக்கம் போல நான் அதே நேரம் அதே இடத்துக்கு போனேனா............!!!

நேத்து பாத்த அதே பிகரு எனக்காகவே வழிமேல் விழி வைத்து வாய பொளந்த படி நின்னாங்க. எனக்கு என்னடா இவள் எனக்காகவே இவளவு நேரமா அதுவும் இந்த காலங்காத்தால பனித்துளிகள் உடம்பை நனைத்திருக்க.........

. அப்போ தான் அவ மேல எனக்கு ஒரு இது வந்துது

சரி அடுத்தநாள் கவனிக்கலாம் எண்டு வந்துட்டேன், அவளும் நான் திசையே பாத்துட்டு இருந்தா..............



மறுநாள் நானும் அவளுக்கு எதாவது  குடுக்கனுமே என்ட ஆர்வத்துல ஒரு கடிதம் எழுதினேன், அவளுக்க்காகவே காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதையா எழுதினேன்....



அந்த கடிதத்தையும் எடுத்துட்டு மறுநாள் அதேநேரம் அந்த இடத்துக்கு போனேன் எனக்கு ஒரு அதிர்ச்சி  காத்துட்டு இருந்துது அவளுக்கு பக்கத்துல அவளது தோழி பச்சை கலரு டிரஸ் ள செமையா நின்னுட்டு இருந்தாள்.....(நம்பர் டூ)



ஒரே  கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்கலாமா எண்டும் யோசிச்சேன் ,,,, அப்புறம் மனசு மாறி ....

எனக்காகமுதன் முதலா காத்துட்டு இருந்த அந்த சிவத்த பிகருக்கு கிட்ட போனேன், 

அவளது மேனியை மெல்ல வருடினேன்......

அவளது தலையை  மெல்ல தடவினேன்.....

உடம்பு செம வளவளப்பா  இருந்துது .......

அவா எதுவுமே சொல்லாம என்ன பாத்து மெல்ல புன்னகைத்தாள் 

நானும்அந்த கடிதத்த அவளது வாயில போட்டுட்டு வந்தேன்  ( நம்பர் த்ரீ)...





 படங்கள் கீழே .....


















1
இவா தான் அந்த சிவத்த பிகரு கருப்பு பூட்சு







 2


பச்ச கலரு டிரஸ் போட்ட நண்பி



  




3



கடிதம் குடுக்குறேன்







நிஸ்கி  2-- சும்மா விளையாட்டுக்கு சார் 
நிஸ்கி  3  --- இதுபோல இன்னும் வரும்....

 

 

7 comments:

  1. //அவளது மேனியை மெல்ல வருடினேன்......


    அவளது தலையை மெல்ல தடவினேன்.....


    உடம்பு செம வளவளப்பா இருந்துது .......///

    னைட்டு எவனாவது ஒன்னுக்கு அடிச்சுட்டு போயிருப்பான்.. அத போயி......ச்சே..சே..

    ReplyDelete
  2. சூப்பர் பதிவு.. ரொம்ப ரசித்தேன்..

    ReplyDelete
  3. னைட்டு எவனாவது ஒன்னுக்கு அடிச்சுட்டு போயிருப்பான்.. அத போயி......ச்சே..சே..////

    காலையில அது பணித்துளியாள நனைஞ்சு சுத்தம் ஆகிருக்கும் பாஸ், அதுவும் நான் தலையில தான் ஓவர் ஆ தடவினேன்


    சூப்பர் பதிவு.. ரொம்ப ரசித்தேன்..//

    நன்றி நன்றி,

    ReplyDelete

நல்லா தலையில உரைக்குற மாதிரி சொல்லுங்க