நான் இங்கே பதிவிடும் பதிவுகளில் , எனது சொந்த ஆக்கம், மற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆக்கம் , ரசித்தவை , அனுபவித்தவை, படித்தவை, மற்றும் எனக்கு எதாவது ஒரு தருணத்தில் உபயோகப்படும் என நான் நினைக்கும் விடயங்கள் (மற்றவரின் ஆக்கங்கள்) போன்ற அனைத்தும் அடங்கும்.



தூற்றுபவர் தூற்றட்டும் போற்றுபவர் போற்றட்டும், நான் எனது வழியில் முன்னேறி செல்வேன்.

Saturday, November 5, 2011

எயார்டெல் எனக்கு வைத்த ஆப்புகள்...........










அவ்வ்வ்வ்வ்..!!!!

என்ன பாக்குரிங்க, ?
நான் தான் அழுதுட்டு இருக்கேன்,
என்ன விஷயமா?
இந்த எயார்டெல் இலங்கைக்கு வந்த நாள் தொடக்கம் எனக்கு ஒவ்வொரு நாளும் வைக்குற ஆப்புகள் தான் என்னைய அழ வச்சிட்டு இருக்கு............

அதெல்லாம் பெரிய கதை, அதப்பத்தி வேற பதிவுல வெளக்கமா சொல்றேன்.
இப்போ ரெண்டு நாள் முன்னாடி அடிச்ச ஆப்பு பத்தி சொல்றேன் கேட்டுக்கங்க.

இவளவு நாளா நான் SLT ADSL  தான் பாவிச்சிட்டு இருந்தேன் 2010 வர.
அதுக்கு வாடகை, டெலிபோன் வாடகை ரெண்டும் சேர்த்து 2200 Rs கட்டிட்டு இருந்தேன்.

அப்போ தான் Mobile BroadBand வந்துச்சு.
 
சோ இலங்கையில இருக்க 4 mobile network (5 இருக்கு பட் ஹட்ச் 3G இல்ல) ல ஒவ்வொரு பிளான் ஆ தேடி தேடி... எனக்கு பொருத்தமா இருக்க.
எயார்டெல் அன்லிமிட் (DATA UNLIMIT) பிளான் வாங்கினேன்.
அதுக்கு connection fee 500 rs, monthly rentel 1500rs. + VAT = 1903 rs PERMONTH.
முதல் மாச பில் பாத்து அதிர்ச்சியா இருந்துது.......

சரி குட்டையில கால விட்டாச்சு  நாத்தம் அடிக்க அடிக்க இருப்பம் எண்டு நெனச்சு.......... ஒரு 6 மாசமா அத வச்சி ஓட்டினேன்..........

அந்த 6 மாசத்துல எனக்கும் எயார்டெல் க்கும் 1008 பிரச்சினை வந்துட்டு,

அவங்களுக்கு கால் பண்ணி பண்ணியே என்னட போன் பெற்றி புட்டுக்கிச்சு L.

அதுல சில பிரச்ச்சனைங்க உங்களுக்காக :-

·         ரெண்டாவது மாசத்துல இருந்து ஸ்பீட் சுத்தமா புட்டுக்கிச்சு.
·         அப்படியே ஸ்பீட் ஆ இருந்தாலும், அடிக்கடி discconect  ஆகிடும்.
·         எல்லாம் ஒழுங்கா இருந்தாலும், அந்த சேவை இந்த சேவை எண்டு அதிகமா பில் வரும்.
இப்படி எக்கச்சக்க பிரச்சனை......

எயார்டெல் ஸ்டோர் ல சண்டை பிடிக்க போய் போய் போய் அங்க இருக்கவங்க எல்லாம் எனக்கு நண்பர்கள் ஆகிட்டாங்க (ஒவ்வொரு Friend m  தேவ மச்சி)


இப்படி சொல்லிகிட்டே போகலாம். எனக்கும் எயார்டேல்லுக்கும் நடக்குற சண்டை, எங்க வீட்டுல ரொம்ப பிரபலம்,

நான் மொபைல் ல யார்குடவாச்சும் சத்தமா, சண்டை பிடிக்குரத வீட்டுல கண்டாங்கன்ன கேப்பாங்க யாரோட சண்டை பிடிக்குற எயார்டெல் ஆ எண்டு...............

சரி விசயத்துக்கு வாரேன்....

வரும்  11-7-2011 முதல் எயார்டெல் DAILY DATA PLAN
45 Rupees  = 150 MB +  a2a 45 sms (only one day valid)
இது தானுங்க எனக்கு விழுந்த இடி..............

இந்த டேட்டா பிளான் நம்பி தான் நான் ஒன்னரை வருசமா ஓட்டிட்டு இருக்கேன்.........


இது நான் எதிர்பாத மாற்றம் தான்.............................................

ஆனா இவளவு சீக்கிரம் தலையில போடுவாங்க எண்டு நினைக்கல..........


இவளவு நாளா

45rupee = 1.5 GB  கிடச்சுது......................................

ஒரு நாளுக்கு 1.5 GB   பாவிச்ச எனக்கு....................

150 MB எந்த மூளைக்கு காணும் ??????

இந்த ரெண்டு நாளா இதையே நினச்சு நினச்சு நாள் போகுது........

அடுத்து எந்த பிளான் கு மாறலாம் எண்டு பாத்தா...........

இலங்கையில இருக்க ப்ரீ பெயிட் பிளான் எல்லாமே இப்படி குறைஞ்ச டேட்டா அளவுல தான் இருக்கு.....

போஸ்ட் பெயிட் எடுக்கலாம் எண்டு பாத்தா அது பேயார் யுசெர் பாலிசி (FAIR USER POLICY) ஒரு மாசத்துல 10GB க்கு மேல பாவிச்சா  இணைய வேகம் பாதியா குறைஞ்சிடும்........(இவனுங்க தர வேகமே போதாது , அதுல பாதி வேகத்த வச்சி என்ன நோட்டுறது ?)

சரி நம்ம தாரக மந்திரம் ADSL கு மாறலாம் எண்டு பாத்தா.......

வீட்டுல டெலிபோன் லயின் இல்ல சோ அதுவும் not posibl

 இப்ப் நான் என்னதான் பண்ணுறது ????

யாராவது சொல்லுங்கப்பா...........


மறுபடியும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........................................................

Tuesday, October 25, 2011

உக்ரைன் பயணம் பார்ட் 3 (கொழும்பு - டெல்லி )

 உக்ரைன் பயணம் பார்ட் 3 (கொழும்பு - டெல்லி )



வணக்கம் மக்காஸ் எப்படி இருக்கீங்க ????? தமிழ் மணம் சண்டை எல்லாம் எப்படி போகுது ???


ஹிஹி குசலம் விசாரிக்கனுமாமே அதான் இப்படி எல்லாம்.......



அப்புறம் என்ன விசயம் எண்டு கேக்குரின்களா?  விசயம் பெருசா ஒன்னும் இல்லைங்கோ....... நான் உக்ரைன் போன கதைய சொல்லலாம் எண்டு தான் வண்தேனுங்கோ ,,,


இந்த விசயம் பத்தி ஏற்கனவே ரெண்டு பதிவு போட்டாச்சு... அத படிக்கனும்னா  இங்க கிளிக்குங்க ......1,2



நான் டெல்லி போனது வர உங்களுக்கு சொல்லிட்டேன்,,,,,

இப்போ சொல்லப்போறது டெல்லி ல நடந்த விசயங்கள் பத்தி..........





டான் டான் டான் டான் டான் எண்டு நைட்டு பன்னிரண்டு மணி அடிக்குற நேரத்துல, நாங்க டெல்லி ல கால்  வாச்சம்.(ஆமா இவரு நீல்  ஆம்ஸ்ட்ராங் பாரு கால்  வச்சாராம்)






அப்புறம் விமான நிலையத்துல வழக்கமான சோதினை எல்லாம் முடிச்சிட்டு அங்கேயே இருக்க எயார்டெல் பூத் ல நம்ம வீட்டுக்கு கால் பண்ணி நம்ம சுகமா(லக்மாளி கூட) வந்து சேர்ந்தத சொல்லியாச்சு


அப்போல்லாம் இலங்கைல எயார்டெல் இல்லை  ஆனா வெகு சீக்கிரம் இலங்கைக்கு வருவம் எண்டு அறிவிச்சு இருந்தாங்க

அதனாலேயே எயார்டெல் மேல ஒரு காதல் வந்திட்டு, சோ எயார்டெல் ல பேசினது ஏதோ லாற்றி அடிச்ச மாதிரி சந்தோசம்.......



அப்புறம் விமானநிலையம் உள்ளே இருக்க ஏதோ ஒரு டேக்சி சர்வீஸ் ல நாங்க போகவேண்டிய இடமான டெல்லி ரெயில்வே ஸ்டேசன் கு போறதுக்கான டேக்சி புக் பண்ணினம்,

அவனும் காச வாங்கிக்கிட்டு, வெளிய போங்க, மஞ்சள் கலருல டாட்டா இண்டிகோ நிக்கும், இது தான் டிரைவர ட நம்பர் எண்டு சொல்லி ஒரு ரசீது தந்தான்....


அந்த ரசீதையும் பாக்கெட்டுல பத்திரப்படுதிட்டு, விமான நிலையத்த சுதி பாக்கணுமே எண்டு பீட்டர் கிட்ட சொன்னேன்,(நமக்கு விடுப்பு பாக்குரது எண்டால்  அலாதி பிரியம்)


ஆனா என்கூட  வந்த ரெண்டு மாடுங்களும் நித்தா வருது சோ போகலாம் நு சொல்லிட்டாங்க (கிராதகா)
(ஏற்கனவே 2 ஜீவனும் பிளைட் ல செம தூக்கம்)




அப்புறம் என்ன நான் என்னட மூஞ்சிய  அஷ்டகோணல் ஆக்கிட்டு வெளிய வரவே மனசில்லாம கார் பார்கிங் போனம்,


முதன் முதலா வெளிநாடு வந்த சந்தோசம், திரும்புற பக்கமெல்லாம் ஹிந்தி மாலு , அதுல பாதி சீக்கியர் , பாக்கவே சூப்பரா இருந்துது டெல்லி விமான நிலையம்,

ஆனா அந்த ரெண்டு சோரன கெட்ட ஜென்மத்தால என்னட பராக்கு பாக்குற ஆசையெல்லாம் தவிடு  பொடியா போயிட்டு :(



அப்புறமா வெளிய வந்து பாத்தா ............ ஆத்தா.............. பாக்குற டேக்சி எல்லாமே மஞ்சள் கலருல தான் இருந்துது .. இது என்ன கொடுமைடா  எண்டு நம்ம டாட்டா இண்டிகோ வ தேடினா.......


அது ஒரு ஓரத்துல நின்னுது, டிரைவர் அழகா சிகரட் புகச்சிட்டு நின்னான்..........


ரசீத அவன்கிட்ட காட்டி , நாங்க மூணு பேரும் பின் சீட்லயும் பீட்டர் முன் சீட்லயும் ஏறினாரு...


அப்புறம் என்ன காரு சும்மா ஜிவ் எண்டு பரந்துது.... ஆகா இப்படி போன 5 நிமிசத்துல போயிடலாமே எண்டு நினைக்கும் போதே.... மெயின் ரோடு வந்துச்சா.......


அப்பத்தான் தெரிஞ்சுது கொழும்பு ட்ராபிக் அ விட டெல்லி ட்ராபிக் அதிக அதிக அதிகம் எண்டு.....

அப்புறம் இஞ்ச பை இன்ச் ஆ ரோடு அளந்தான் அந்த டிரைவர்..........

 நம்ம தோழமைங்க ரெண்டும் காருள் தூக்கம்....... பீட்டரும் நல்ல தூக்கம்....
நான் மட்டும் தான் அந்த டிரைவர் கூட நமக்கு தெரிஞ்ச இங்கிளிபீசு ல மொக்க போட்டேன்....




அப்புறம் ஒரு மாதிரி ரயில்வே ஸ்டேசன் கிட்ட வந்தம் ...


அப்படியே, அங்க இருக்க ஒரு மேம்பாலம் (வாரணம் ஆயிரம் ல சூர்யா கஞ்சா அடிக்குற பாலம்) தாண்டி இருக்க ரெண்டாவது ரோட்டு ல ஏதோ கிரசென்ட் டெலுக்ஸ் என்ட ஹோட்டல் ல
கார் நின்னுச்சு,


அப்புறம் நானுனம் பெரிய கஷ்டப்பட்டு நான் கொண்டு போன லக்கேஜ் எல்லாம் தூக்கிட்டு ஹோட்டல் உள்ள போனம், அப்போ ஒருத்தன் ஓடி வந்து எங்க லக்கேஜ்ஜ் எல்லாம் வாங்கினான்,

(அடடா நம்மக்கு ஒரு வேலக்கரனா எண்டு சந்தோசப்பட்டேன்)


வாழ்க்கைல முதன் முறையா ஒரு ஹோட்டல் ல ரூம் போட்டு தங்குரம் என்ட சந்தோசமும், முதல் அனுபவம் இன்னும் எவளவோ சொல்லலாம்,.....


நானும் மத்த ரெண்டு ஜீவனும் ஒரு ரூம் ல. பீட்டர் இன்னொரு தனி ரூம் ல.


எங்க ரூம் ல ரெண்டு கட்டில் இருந்துது, ஒன்னு டபல் பெட், மத்தது சிங்கள் பெட்.......


ஹிஹி உங்களுக்கு தான் தெரியுமே நான் எப்பவும் யுனிக் எண்டு,

 சோ நான் சிங்கள் பெட் ல என்ட பெட்டியெல்லாம் வச்சிட்டு, குளிக்க போயிட்டேன்..(அவங்க குளிச்ச்சு  நாரடிச்சிடுவாங்க, அதான் நான் முந்திகிட்டேன்)



குளிச்சிட்டு வந்து பாத்தா நம்ம பீட்டரு டெல்லி ஸ்பெசல் சப்பாத்தி அண்ட் பருப்பு  கறி ஆர்டர் குடுத்து வாங்கி வச்சிருந்தாரு......


நானும் குளிச்ச அலுப்பு ல அவங்க குளிக்குற கெப் ல அஞ்சு (சும்மா சொல்ல கூடாது செம டேஸ்ட்)  சப்பாத்திய முழுங்கிட்டு சொர்கலோகத்துக்கு போயிட்டேன்
( கனவுல லக்மாளி )


=======================================================================



விடிய காலம்பர எழும்பி  உக்ரைன் எம்பெச்சி போறதுக்கு தயாரானோம், (அந்த ரெண்டுபேரும் கோட் சூட் போட்டுகிட்டங்க)

நான் வழக்கம் போல அந்த நீல கலருல போனேன்... இந்த முறை ஹோட்டல் ல எங்களுக்காக ஒரு ஸ்கார்பியோ  புக் பண்ணி இருந்தாரு பீட்டரு.....


(இந்தியா விட்டு போகும் வர அந்த காரு தான் நம்ம தோழன்)

 அப்போ தான் சிங் இஸ் கிங்  படம் வந்திருந்துது, அ தனால எப்பவும் எங்க காருல அந்த படத்து பாட்டு தான் போகும்....... 













நான் காலையிலேயே பிரைட் ரயிஸ் ஆர்டர் பண்ணி சாப்பிட்டேன்,
(அந்த ரெண்டு ஜீவன்  பத்தியும் கணக்கு எடுக்குறதே இல்ல எண்டு முடிவு பண்ணிட்டேன்)

(ஏன்னா அவங்க கொஞ்சம் ரேசெர்வ் டைப் )


அவங்க நூடில்ஸ் ஆர்டர் பண்ணி சாபிட்டங்க..... நான் கீழ போய் காருல எனக்கு தேவைப்பட்ட விண்டோ சீட் ல இருந்தேன்.....

 அவங்களும் வந்ததும், கார் நேர ஒரு மெடிகல் சென்டர் ல போய் நின்னுது,(கச்சேரி ஆரம்பம்)




உள்ள போனா ஒரு கண்ணாடி போட்ட டா(dog)க்குட்டறு  நின்னாங்க.....

தனித்தனியா ஒவ்வொருவரா உள்ள கூப்பிட்டு (ஆவ்வ்வ்)

என்னட முறை வந்துது............ பயந்துகிட்டே உள்ள போனேன்....


நான் பயந்தது நடந்துது...........................


ஒரு பெரிய ஊசி போட்டு இரத்தம் டெஸ்ட் பண்ணினாங்க .......   அவ்வளவு தான்...

சின்னதுல இருந்தே எனக்கு இருக்க பழக்கம்.....


தல சுத்திச்சு,,,, அங்கேயே பத்து நிமிஷம் தூங்கிட்டேன்............( இது தான் அந்த பழக்கம் )





அப்புறம் மிச்ச மீதி இருந்த டெஸ்ட் எல்லாம் முடிச்சிட்டு ரிப்போர்ட் வாங்கிட்டு எம்பசி போனோம்........



அங்க தான் ஆரம்பிச்சுது வாழ்வுல  மறக்க முடியாத நிகழ்வுகள் எல்லாம்.......




எம்பசி ல எங்களைப் போலவே நெறைய பேரு கைல பயில் வச்சிட்டு டெண்சென் ஆ இருந்தாங்க............


பத்து பத்து பெற உள்ள விட்டாங்க.... நல்ல வேல நான் உள்ள போகும்போது அந்த ரெண்டு ஜீவனும் வரல.....

உள்ள போன ஒரே ஆனந்த இன்பம் பொங்கிச்சு (கலர் கலரா வட நாட்டு குட்டிங்க ஒரு ஆறேழு பேர் நின்னாங்க)

அப்புறம் எனக்கு இன்டர்வியு நடந்துது.......

இதுக்காக இரவு பகலா படிச்சிட்டு போனேன், ஆனா அங்க என்கிட்டே கேட்ட கேள்வி என்ன தெரியுமா?












இலங்கையில் சனாதிபதி யாரு ?

இலங்கையின் சனத்தொகை எவ்வளவு.?


இப்படி ரெண்டே ரெண்டு மொக்க கேள்விய கேட்டுட்டு (அவங்களுக்கே தெரிஞ்சிட்டு நான் மொக்க எண்டு)

இருங்க ரிசெல்ட் சொல்றோம் எண்டு சொன்னாங்க.......



இங்க தான் ஆரம்பிச்சுது அந்த இனிமை......


நான் போய் ஒரு வாங்குல இருந்தேனா...

என்னட முதுகுப்பக்கம் ஒரு பொண்ணு இருந்துச்சா....

எனக்கு பத்திகிச்சா.....

நான் சாரி சொன்னேனா.....

அவா இட்ஸ் ஓகே சொன்னாளா.....


நான் பல்லு இழிச்செனா......



அவா என்ன பத்தி கேட்டாளா.............

நான் அவல பத்தி கேட்டேனா .......

போன் நம்பர் வாங்கிகிட்டமா.............


(அப்போ ஆரம்பிச்ச பழக்கம் நான் இலங்கை வரும் வர உக்ரைன் ல அந்த பொண்ணு என்குட நல்ல ஒட்டு....)




ரெண்டு பேருட முதுகும் ஒண்ணா உரசிச்ச்சா........



(அடுத்தநாள் தாஜ்மஹால் போனத பத்தி அப்புறமா சொல்றேன்)