நான் இங்கே பதிவிடும் பதிவுகளில் , எனது சொந்த ஆக்கம், மற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆக்கம் , ரசித்தவை , அனுபவித்தவை, படித்தவை, மற்றும் எனக்கு எதாவது ஒரு தருணத்தில் உபயோகப்படும் என நான் நினைக்கும் விடயங்கள் (மற்றவரின் ஆக்கங்கள்) போன்ற அனைத்தும் அடங்கும்.



தூற்றுபவர் தூற்றட்டும் போற்றுபவர் போற்றட்டும், நான் எனது வழியில் முன்னேறி செல்வேன்.

Tuesday, October 9, 2012

கதி கலங்க வைத்த நண்பனின் அகால மரணம்,

MURAAD (முராத்)

இப்போ இந்த பெயர உச்சரிக்கும் பொது உடம்பெல்லாம் புல்லரிக்குது.

எப்போ  நமக்கும் இந்த நெலம வரும் எண்டுமனசு பயப்புடுது.

சைபர்  கேம் எனும் கணினி விளையாட்டு புலி.

இவனுக்கு கீழ நூத்தி சொச்ச பேரு இருக்காங்க.

TEAM PnX  எனப்படும் சைபர் கேம் அணியிட முதுகெலும்பு.

சுமார் மூன்று வருசத்துக்கு முன்னாடி எனக்கு அறிமுகமானான்.

முதல்  அறிமுகமே எனக்கும் அவனுக்கும் ஒரு போட்டி.

அவன பாக்கும்போதே எனக்கு பயம் தொத்திகிச்சு.

பாக்குறதுக்கு சைனா காரன் மாதிரி இருந்தான்.

ஆனா பழகுறதுக்கு கூட பிறந்தவன் போலஉணர்ந்தேன்.

அதுக்கு  அப்புறம் நானும் அவனும் நிறைய விளையாட்டுல கலந்துகொண்டோம்.

 அப்படியே எங்க நட்பும் வளர்ந்தது.


 விதி விளையாடியது அவனது வாழ்வில்.

நவம்பர் 2011  அவனுக்கு நுரையீரல் புற்றுநோய் எண்டு கண்டுபுடிச்சாங்க.

அவன் புகை புடிப்பது இல்லை ஆனால் வியாதி அவனை பிடித்துக்கொண்டது

முழுசா  ஒரு வருசம் கூட  ஆகல, அதுக்குள்ளே அவன்ட பூவுலக வாழ்க்கை முடிஞ்சுது.


முதல் சந்திப்பு 





தம்பியுடன்

அவனுக்கு பிரியமான தோழன்



ஆருயிர் தோழர்கள்



அவனதுபயிற்ச்சியினால் வெற்றிபெற்ற சகபாடிகள்


நட்பு வட்டம்


தாயுடன்


விதியின் பிடியில்


தன்னைத் தாணே கேலிசெய்த குரும்புத்தருணம்


இறுதியில்





எண்டைக்குமே உன்ன மறக்க மாட்டம் மச்சி........

2 comments:

  1. உறவுகள் மறந்து போகும், மலர்கள் உதிர்ந்து போகும், காட்சிகள் மறைந்து போகும் ஆனால் இறுதிவரை நம்முடன் வருவது நட்பு ஒன்றே!

    சிந்திக்க வைத்து, சிரிக்க வைத்து, இன்பத்திலும் துன்பத்திலும் உடன்வந்து உருகவைப்பதும் நட்பு ஒன்றே!!

    ReplyDelete
  2. ஆம் நண்பா, நட்பு புனிதாமானது, ஆனால் அதே நட்பு நம்மை விட்டு பிரியும் பொது அதன் வலி நம்மால் தாங்க முடியாது

    ReplyDelete

நல்லா தலையில உரைக்குற மாதிரி சொல்லுங்க