நான் இங்கே பதிவிடும் பதிவுகளில் , எனது சொந்த ஆக்கம், மற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆக்கம் , ரசித்தவை , அனுபவித்தவை, படித்தவை, மற்றும் எனக்கு எதாவது ஒரு தருணத்தில் உபயோகப்படும் என நான் நினைக்கும் விடயங்கள் (மற்றவரின் ஆக்கங்கள்) போன்ற அனைத்தும் அடங்கும்.



தூற்றுபவர் தூற்றட்டும் போற்றுபவர் போற்றட்டும், நான் எனது வழியில் முன்னேறி செல்வேன்.

Monday, July 4, 2011

உக்ரைன் பயணம் பார்ட் 1 ( தொடர் பதிவு )

அப்போ நான் கொழும்பு இந்துக்கல்லூரி ல ஏ/ல் (பிளஸ் டூ ) சயின்ஸ் படிச்சிட்டு இருந்தேன். அப்பாட சின்ன வயசு ஆச நான்  ஒரு டாக்டர் ஆகணும் எண்டு, அதுக்காக அவரு நிறைய  முயற்சி செஞ்சாரு..... ஒருமாதிரி உக்ரைன் ல ஒ/ல்  ரிசல்ட்  வச்சிருந்தா  போதும் டாட்டர் கு படிக்கலாம் எண்டு சொன்னங்க, சரியெண்டு வேலையில இறங்கினேன்...


                                            (இது தானுங்க அந்தயுனிவேர்சிட்டி )

கொழும்பு பிளாசா ல இருக்க ஒரு ஏஜெண்ட பிடிச்சு என்னட சர்டிபிகேட் எல்லாம் அனுப்பினேன்,,, சரியாய் ரெண்டு கிழமையில எனக்கு அழைப்பு  வந்துது..

ஹலோ- நீங்க யாரு ?
அப்படியா ? உண்மையா வா?  இதோ இப்பவே வாரேன்...

ஓடி போறேன்  ஏஜென்ட் கிட்ட, அவரு தந்த கவர வாங்கிட்டு அப்பாட  கடைக்கு போனேன், அப்பாகிட்ட எல்லாத்தையும்  விளக்கமா சொல்லி  அடுத்த கிழமை காசு கட்டனும் எண்டு சொன்னேன் ,

அப்பா சொன்னாரு, நீ அரசாங்க முத்திர வாங்குற வேலயப்பரு நான் காசு வேலயப்பாக்குறேன் எண்டு, அப்புறம் ஒரு கிழமை

கொழும்பு ல இருக்க வெளிநாட்டு அலுவல் அமைச்சு, இசுருபாய  ல இருக்க இலங்கை கல்வி திணைக்களம் எல்லாத்துக்கும் போய் கால  கடுக்க நிண்டு ஒரு மாதிரி கண்ணுல காச காட்டி வேளைய முடிச்சி எல்லா டாகுமென்டும் ரெடி பண்ணிட்டு ....

அதே ஏஜென்ட் கிட்ட ஒப்படச்சேன்,

என்னாலேயே நம்ப முடியல உக்ரைன் ல இருக்க மெடிக்கல் யுனிவர்சிட்டி ல இருந்து என்னைய செர்த்திருக்காங்க எண்டு கடிதம் வந்துது அப்புறம் என்ன ???

பறக்க வேண்டியது தானே.............


ஹிஹிஹி எப்படி பறந்தேன் எண்டு அடுத்த பதிவுல சொல்லுறேன்.....


இதுல தான் பறக்க போறேன்