நான் இங்கே பதிவிடும் பதிவுகளில் , எனது சொந்த ஆக்கம், மற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட ஆக்கம் , ரசித்தவை , அனுபவித்தவை, படித்தவை, மற்றும் எனக்கு எதாவது ஒரு தருணத்தில் உபயோகப்படும் என நான் நினைக்கும் விடயங்கள் (மற்றவரின் ஆக்கங்கள்) போன்ற அனைத்தும் அடங்கும்.



தூற்றுபவர் தூற்றட்டும் போற்றுபவர் போற்றட்டும், நான் எனது வழியில் முன்னேறி செல்வேன்.

Thursday, October 11, 2012

முட்டைகொத்தும் எக்ஸ்ட்ரா சண்டையும் ..................!!! (அனுபவம்)

கேட்டால் கிடைக்குமுன்னு சொல்லுரம் ஆனா

போற இடங்கள் ல எங்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமையை கேட்டால் என்கூட வாரவங்க  என்னை திட்டுறாங்க.......


இது அண்மையில் நடந்த விசயம்,

வழக்கமா நாங்க கொத்து  ரொட்டி வாங்குற கடை அன்னைக்கு மூடி இருந்துது. அதனால கொஞ்சம் தள்ளி இருக்க ஒரு கடைக்கு போனேன். அங்கே பீப் கொத்து இல்லையாம்;

சரி ரெண்டு முட்டை கொத்து குடுங்க எண்டு சொன்னேன்.

பிளஸ் எக்ஸ்ட்ரா ரெண்டு முட்டை போட சொன்னேன்.

ஒரு முட்டை கொத்து 130 rs, so 2 x 130 = 260

ஒரு எக்ஸ்ட்ரா முட்டை 25 rs so 2 x 25 = 50

( மார்கட்டுல ஒரு முட்டையின் விலை 10rs)

இந்த பில்  பாத்ததும் எனக்கு பத்திகிச்சு வந்துச்சு.........

பில் போட்டவன் கிட்ட கேட்டேன் இது என்ன அநியாயம் வெளிய ஒரு முட்டை 10rs  விக்கும் போது நீங்க 25 சார்ச் பன்றின்களே, அட்லீஸ்ட் ஒரு 15rs  சார்ஜ் பண்ணினா கூட  பரவால இது டூமச் எண்டு.



அதுக்கு அவரு சொல்றாரு, எக்ஸ்ட்ரா முட்டை போடுரதண்டால் சும்மா வா , காஸ் செலவாகும், கொத்து போடுரவனுக்கு சம்பளம் குடுக்கணும் , நேரம் விரயமாகும் அதான் இந்த விலை எண்டு.






அப்புறம் சொல்லவா வேணும் எனக்கு,                   
( சும்மாவே கொத்து நல்லா இல்லனா சண்டை போடுற ஆளு நான் )

 நான் சொன்னேன் வரச்சொல்லு உங்க மனேஜர, நான் அவர்கிட்ட கம்ப்லையின் பண்ணுறேன் எண்டு.

அதுக்கு அவன் சொல்றான், மனேஜர் எல்லாம் உங்கள பாக்க வரமாட்டாரு, நீங்க விருப்பமென்டா வாங்குங்க இல்லாட்டி போகலாம் எண்டு.

 (வீட்டுல அப்பா பசியோட இருப்பாரு இவன் கூட  சண்டை பிடிச்ச அது நமக்கு தான் லேட் ஆகும் அதால இப்ப சண்டை வேணாம்)

அப்போ நான் சொன்னேன் சரி நீங்க எக்ஸ்ற்றாவும் போடவேனாம் ஒரு மண்ணும் வேணாம், நார்மல் முட்டை கொத்து ரெண்டு போடுங்க எண்டு.

( இதெல்லாம் நடக்கும் போதே கொத்து போடுறவங்கள கவனிச்சிட்டு இருந்தேன், அவங்க ரெண்டு பேருல ஒருத்தன் நல்ல கொத்துராறு, மத்தவன் அவளவு சரியில்ல. அப்பவே மனசுல நினச்சேன் முதல் ஆள் கிட்ட தான் கொத்தனும் எண்டு)

சோ அவனும் நானும் சமாதானம் ஆகி ரெண்டு நார்மல் முட்டை கொத்துக்கு ஆர்டர் பண்ணிட்டு சொன்னேன் முதல் ஆள் கிட்ட சொல்லி கொத்துங்க எண்டு.

அவனும் சரி எண்டு சொல்லிட்டு அவன்ட வேளைய பாக்க போய்ட்டான்.


நான் கொத்து போட சொன்ன அந்தாளு ரொம்ப பிஸியா வேல செஞ்சிட்டு இருந்தான். நானும் கவனிச்சிட்டு இருந்தேன் எப்ப என்னட ரெண்டு முட்டை கொத்து  போடுவான் எண்டு,

(அதே நேரம் மத்த கொத்து காரண மேலயும் ஒரு கண் வச்சிருந்தேன்.)

அப்போ அந்த ரெண்டாவது ஆளு  4  முட்டை போட்டு ரெண்டு கொத்து போட்டுட்டு இருந்தான்.

1 முட்டை கொத்து = 2 முட்டை


சோ அவன் என்ன செஞ்சான் எண்டா,

 4  முட்டய போட்டு நிறைய ரொட்டிய போட்டு, கொத்தி அதுல ரெண்டு பார்சளையும் கட்டிட்டு, மீதமா இருந்த ரொட்டி ல சிக்கன் போட்டு  கட்டி அத வேற ஒரு பார்சல் பண்ணிட்டான் .


நான் நினச்சேன் அது வேற யாருக்கோ போகுது எண்டு,

ஆனா அந்த ரெண்டு பார்சளையும் நேர என்கிட்டே கொண்டுவந்து நீட்டினான்
நானும் ஏதோ  நெனப்புல வாங்கிட்டேன்.

வாங்கிட்டு ரெண்டு ஸ்டெப் வச்சதும் தான் எனக்கு நினைவு வந்துது,

நான் முதலாவது ஆள் கிட்ட கொத்து போட சொன்னதும், அதேநேரம் ரெண்டாவது ஆள்  4 முட்டையில 3  கொத்து போட்டதும்.

 சோ மறுபடி திரும்ப போய் அவன்கிட்ட சொன்னேன், நான் கொத்து போட சொன்னது முதலாவது ஆள் கிட்ட, ஆன எனக்கு கொத்து போட்டது ரெண்டாவது ஆள்,

 இப்ப அது பிரச்சனை இல்ல.
அவர் கொத்துக்கு போட்ட முட்டையிட கணக்கு தான் பிரச்சினை எண்டு,

ஏன் என்ன பிரச்னை எண்டு கேட்டாங்க, நான் விளக்கமா சொன்னேன், இப்படித்தான்  4 முட்டையில 3 கொத்து போட்டாரு, அதுல மூனாவது சிக்கன் கொத்து அது அங்க இருக்கு பாருங்க எண்டு,

அவங்களும் அந்த கொத்து போட்டவர கூப்பிட்டு கேட்டாங்க இப்படி நடந்துதா எண்டு.

அவரும் ஆமா இப்படி நடந்துது, காரணம் ரெண்டு முட்டை கொத்துக்கு உரிய ரொட்டி போடும் போது கொஞ்சம் அதிகமா போட்டுட்டேன், சோ அதுல இன்னொரு சிக்கன் கொத்து ஆர்டர் வந்துது , அதுக்கு இத பலன்ஸ் பண்ணிட்டேன் எண்டு.

அவங்களும் அப்படினா சரி எண்டு சொல்லி எனக்கு சொல்றாங்க நீங்க உங்க பார்சல கொண்டு போங்க எண்டு,

சும்மா இருப்பானா நான் ?  ஆல்ரெடி எக்ஸ்ட்ரா முட்டைக்கு கோவத்தோட இருந்த எனக்கு என்னட பங்கு முட்டையில வேற ஒருத்தனுக்கு பங்கு போன சும்மா விட முடியுமா ? நான் கொஞ்சம் சத்தத்த உயர்த்தி சொன்னேன் இது சரி வராது நீங்க எனக்கு புதுசா வேற  முட்டை கொத்து போடுங்க எண்டு.

அவங்க இதுக்கு ஒத்து வரல.  அது எங்களுக்கு நஷ்ட்டம் சோ நீங்க இதையே எடுத்துட்டு போங்க  எண்டு சொன்னாங்க,

எனக்கு மனசு கேக்கல. காரணம் ரெண்டு எக்ஸ்ட்ரா முட்ட போட சொன்னதுக்கு இவளவு ரூல்ஸ் பேசின இவங்க  இந்த விசயத்த எப்படி லூஸ்ல விட சொல்லுவாங்க ???

நான்  கொஞ்சம் கராராவே சொன்னேன், ஒன்னு எனக்கு நான் குடுத்த காசுக்கு உரிய என்னட பங்கு முட்டை வேணும், அல்லது தனியா ரெண்டு முட்டை கொத்து போட்டு தா எண்ட.......


அவங்களும்  எவளவோ சொல்லிப்பாத்தாங்க. நான்சமாதானம் ஆகுற மாதிரி இல்ல.  அந்த கேப் ல ஒருத்தன் பொய் அவங்க மனேஜெர கூட்டிட்டு வந்துட்டான். (கஸ்டமருக்கு ஒரு பிரச்சன எண்டா வராத மனேஜர் , அவங்க ஆளுக்கு பிரச்சன எண்டதும் ஓடி வந்துட்டான்.)

அவருகிட்ட  எல்லாத்தையும் வெளக்கமா விலாவாரியா மூச்சு முட்ட சொன்னான்.

அதுக்கு  அந்தா ஆளு அப்படித்தான் தம்பி இங்க, ரொட்டி கூட போட்டு பட்டுட்டா பாலன்ஸ் பண்ணிடுவம் , வேனும்ம்னா  நீங்க அந்த சிக்கன் கொத்தையும் ஓசி ல கொண்டுபோங்க எண்டான்.
நம்ம தான்  மான ரோசம் நெறைய வச்சிருக்கமே.

நீயும் வேணாம் உண்ட ஓசி கொத்தும் எனக்கு வேணாம், என்னட காச எனக்கு திருப்பி தா எண்டு ஒரே பிடியா நிண்டன்.

அந்த  மனுஷன் மனசுக்குள்ள என்ன நெனச்சானோ யார் அறிவா?  சரி தம்பி நீங்க காச கொண்டு போங்க ஆனா மறுபடியும் நீங்க இந்த பக்கமே வந்துடவேனாம் எண்டு சொல்லி, நான் குடுத்த அதே 500ரூபா காச திரும்ப தந்துட்டான்.


-------------------------------------------------------------------------------------------------------
இந்த ஹோட்டல் பத்தி யாரோ ஒருவர் பொரிந்து தள்ளியுள்ளார். அதையும் பாருங்க.

Bilal Hotel Dehiwala the worst food with worst customer respect



The bilal hotel which is located in dehiwala hospital road is the best hotel to get cockroach dishes like cockroach kottu , cockroach fried rice and etc…

The hotel grew up within a short period by providing vey low quality food with very very low quality customer respect.
Dehiwala is one of the best places to find very authentic food stalls and the bilal hotel is a massive disrespect for the hotels in dehiwala.
Whenever a customer makes a query all staff come up with one answer “Kapan natthan palyan” this is one hotel that has been lucky having business even the disrespect their crowd and that I should say very very lucky.
The best way of sales is for the hotel is the crowed that gathers from the main dehiwala mosque all day long what bilal staff and owners do is put negative thought on there religions so that crowed will always return to the bilal hotel since other hotels around belongs to Buddhist or Tamils.
They never respect the customers at all and in my personal experience I know that if there is a cockroach on your dish and if you informed them thy will say okay will get you another no sorry, not even a second thought on how things happen.
It is obvious there are more than several cases against this dirty hotel in local police.
And if you have any bad experience with this hotel please comment below or if you have any pictures of their awesome dirty work please upload it to the facebook page
Blog by : Gayan Dayas & Anfaz Ahmed



இது நடந்து இப்ப ஒரு 2 மாசம் ஆகுது, அப்பவே எழுதி நேரமில்லாம டிராப்ட் ல போட்டுகிடந்துது,

நேத்து அதே கடைக்கு ஒரு நண்பனோட போனன், அப்பயும் பெரிய சண்ட கெளம்பிச்சு,

அத சொல்றதுக்காக தான் இந்த பதிவ தூசு தட்டினன.


அந்த  பெரிய சண்டை இன்னொருநாள் சொல்லுறன்.

Tuesday, October 9, 2012

கதி கலங்க வைத்த நண்பனின் அகால மரணம்,

MURAAD (முராத்)

இப்போ இந்த பெயர உச்சரிக்கும் பொது உடம்பெல்லாம் புல்லரிக்குது.

எப்போ  நமக்கும் இந்த நெலம வரும் எண்டுமனசு பயப்புடுது.

சைபர்  கேம் எனும் கணினி விளையாட்டு புலி.

இவனுக்கு கீழ நூத்தி சொச்ச பேரு இருக்காங்க.

TEAM PnX  எனப்படும் சைபர் கேம் அணியிட முதுகெலும்பு.

சுமார் மூன்று வருசத்துக்கு முன்னாடி எனக்கு அறிமுகமானான்.

முதல்  அறிமுகமே எனக்கும் அவனுக்கும் ஒரு போட்டி.

அவன பாக்கும்போதே எனக்கு பயம் தொத்திகிச்சு.

பாக்குறதுக்கு சைனா காரன் மாதிரி இருந்தான்.

ஆனா பழகுறதுக்கு கூட பிறந்தவன் போலஉணர்ந்தேன்.

அதுக்கு  அப்புறம் நானும் அவனும் நிறைய விளையாட்டுல கலந்துகொண்டோம்.

 அப்படியே எங்க நட்பும் வளர்ந்தது.


 விதி விளையாடியது அவனது வாழ்வில்.

நவம்பர் 2011  அவனுக்கு நுரையீரல் புற்றுநோய் எண்டு கண்டுபுடிச்சாங்க.

அவன் புகை புடிப்பது இல்லை ஆனால் வியாதி அவனை பிடித்துக்கொண்டது

முழுசா  ஒரு வருசம் கூட  ஆகல, அதுக்குள்ளே அவன்ட பூவுலக வாழ்க்கை முடிஞ்சுது.


முதல் சந்திப்பு 





தம்பியுடன்

அவனுக்கு பிரியமான தோழன்



ஆருயிர் தோழர்கள்



அவனதுபயிற்ச்சியினால் வெற்றிபெற்ற சகபாடிகள்


நட்பு வட்டம்


தாயுடன்


விதியின் பிடியில்


தன்னைத் தாணே கேலிசெய்த குரும்புத்தருணம்


இறுதியில்





எண்டைக்குமே உன்ன மறக்க மாட்டம் மச்சி........